1. Let us learn from the Prophet’s Family! PDF Print E-mail
Sunday, 05 April 2009 09:33

The following is a beautiful Hadith from Sahih al Bukhari:

Let us consider this hadith in debth:

The wives of Allah's Apostle were in two groups. One group consisted of 'Aisha, Hafsa, Safiyya and Sauda; and the other group consisted of Umm Salama and the other wives of Allah's Apostle.

The Muslims knew that Allah's Apostle loved 'Aisha, so if any of them had a gift and wished to give to Allah's Apostle, he would delay it, till Allah's Apostle had come to 'Aisha's home and then he would send his gift to Allah's Apostle in her home.

Read more...
 
கோடை ஸ்பெஷல்: மாணவர்களே! இது உங்களுக்கு! PDF Print E-mail
Wednesday, 01 April 2009 11:50

நீங்கள் எதிர் வருகின்ற கோடை விடுமுறையை எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பது தெரிகிறது. கடின உழைப்புக்குப் பின்பு கட்டாயம் ஓய்வு தேவை. ஆனால் அதே நேரத்தில், ஒரு பொன்னான வாய்ப்பாக வருகின்ற ஒரு விடுமுறைக் கால அவகாசத்தை பெரும்பாலான மாணவர்கள் வீணடித்து விடுகின்ற நிலையையும் நாம் கண்டு வருகிறோம்.

எனவே உங்களுக்கென்று சில ஆலோசனைகள்:

பெற்றோர்களிடம்!

உங்கள் பெற்றோர் உங்களின் பள்ளிக்கூட நாட்களில் வீட்டுக்குத் தேவையான எந்த வேலையையும் உங்களிடம் செய்யச் சொல்லியிருக்க மாட்டார்கள். "பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்" என்று உங்களை விட்டிருப்பார்கள். இப்போது ஏதேனும் சில வேலைகளை உங்களிடம் ஒப்படைத்தால் முகம் சுளிக்காமல் செய்து கொடுங்கள். அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள். அது மட்டும் அல்ல. நீங்கள் செய்து கொடுக்கும் வேலைகள் உங்கள் அனுபவமாக உங்களுக்கு பின்னர் உதவும்.

Read more...
 
கோடை ஸ்பெஷல்: இது பெற்றோர்களுக்கு! PDF Print E-mail
Monday, 30 March 2009 15:35

கோடை நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படு சீரியஸாக தேர்வுகளை எழுதி முடித்து விட்டு மாணவர்களும் மாணவிகளும் - எதிர் வரும் கோடை விடுமுறையை "ஜாலியாக" எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சவால்.சில பெற்றோர் - "ஏன் தான் இந்தக் கோடை வருகிற்தோ" என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

எனவே பெற்றோர்களாகிய உங்களுக்கு சில ஆலோசனைகள்:

அவர்களுடன் கொஞ்ச நேரம்

பள்ளிக்கூட நாட்களில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கென ஒதுக்குகின்ற நேரம் மிக மிகக் குறைவு. இந்தக் கோடையிலாவது கொஞ்சம் அதிகம் நேரம் செலவிடுங்களேன். அது Quality time ஆக அமைந்து விடட்டும். மனம் விட்டுப் பேசுங்கள். "அவர்களுடைய உலகத்தைப்" புரிந்து கொள்ளுங்க்ள். அவர்களுக்குப் "போர்" அடிக்கும் அளவுக்கு நீ.....ண்ட உங்கள் சொற்பொழிவைத் துவங்கி விட வேண்டாம். அவர்களைப் பேச விட்டுக் கேளுங்கள். அவர்கள் மனம் திறப்பார்கள். அவர்களைப் புரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு!

Read more...
 
உனக்குள் ஒரு சுரங்கம்! PDF Print E-mail
Saturday, 21 March 2009 12:37

அன்பான வலைதள நேயர்களுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும்!

இஸ்லாமிய மனித வள மேம்பாட்டுக்கான முழுமையான பாடத் திட்டம் (a comprehensive syllabus) ஒன்றை

உருவாக்கிடும் எளியதொரு முயற்சியே எமது வலைதளம்!

பாடத் திட்டம் இதோ!

 

உனக்குள் ஒரு சுரங்கம்!

 

1. நம்பிக்கையில் உறுதி (Conviction in Faith)

2. வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு (Worship with commitment)

3. அறிவைத் தேடும் ஆர்வம் (Pursuit of Knowledge)

4. இறை நெருக்கம் (Closeness to Allah- Tazkiya)

5. அடிப்படை ஏவல்- விலக்கல்கள்; (Basic Do’s And Don’ts )

6. ஒழுக்க மாண்புகள் (Core Values of Islam)

7. நற் பழக்கங்கள் (Etiquettes and Manners)

8. மனித உறவுகள் (Human Relations)

 

9. மனித வள மேம்பாடு ( Human Resource Development)

10. உன்னை அறிவாய்! (Self Discovery)

11. தலைமைத்துவம் (Leadership)

12. தகவல் பறிமாறும் திறன் (Communication Skill)

 

13. உணர்ச்சித் திறன் (Emotional Wisdom)

14. இலட்சிய வாழ்வும் வெற்றியும் (Life Goal – Success)

 

15. திருமண வாழ்க்கை (Marital Life)

16. குழந்தை வளர்ப்பு (Islamic Parenting)

17. சமூகப் பொறுப்பு (Social Responsibility)

18. உன் பங்களிப்பு (Legacy and Contribution)

இன்ஷா அல்லாஹ், வலை மெதுவாகவே பின்னப்படும்!

அன்புள்ள

S.A. மன்சூர் அலி

 

தொடர்புக்கு: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 
2. தொலைபேசி தலாக்! PDF Print E-mail
Thursday, 05 March 2009 09:46

இஸ்லாமிய மாத இதழ்களில் இப்படி சில கேள்விகள் கேட்கப் படுகின்றன:

"எஸ்.எம்.எஸ் வழியே அல்லது தொலைபேசி வழியே தலாக் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமா?" ஆம்! நிகழ்ந்து விடும் என்று ஒரே வரியில் பதில் அளிக்கப் படுகிறது.

ஆனால் பின்னணி என்ன என்பது புரிந்து கொள்ளப் படாமலே பதில்கள் அளிக்கப் படுவதால்
, பலரது வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். சாதாரணமாக மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் கூட, தங்கள் ஆலோசனைகளை எழுதி விட்டு, இறுதியில் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும் என்று முடிக்கிறார்கள். ஏன் அப்படிப் பட்ட ஒரு அணுகுமுறையை நாம் மேற்கொள்ளக் கூடாது? தலாக் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு அளிக்கின்ற பதில்களோடு சேர்த்து, அருகிலுள்ள இமாமையோ, அரபுக் கல்லூரியையோ அணுகவும் என்று எழுதலாம் தானே?
Read more...
 
3. எங்கும் தலைமை! எதிலும் தலைமை! PDF Print E-mail
Wednesday, 04 March 2009 15:40

"லா இஸ்லாம இல்லா பி ஜமாஅதின்

லா ஜமாஅத இல்லா பி இமாரதின்

லா இமாரத இல்லா பி இதாஅதின்"

கூட்டமைப்பு இல்லாமல் இஸ்லாம் இல்லை

தலைமை இல்லாமல் கூட்டமைப்பு இல்லை

கீழ்ப்படிதல் இல்லாமல் தலைமைத்துவம் இல்லை!"

"முஸ்லிம்கள் எங்கிருந்த போதிலும் சரி, எப்படிப்பட்ட சூழலில் இருப்பினும் சரி, சுதந்திரமாக வாழ்ந்தாலும் சரி, அடிமைப் படுத்தப் பட்டிருப்பினும் சரி, ஒரு சிறிய பணியைச் செய்து முடிப்பதாயினும் சரி, மிகப் பெரும் போர் ஒன்றை வழி நடத்துவதாயினும் சரி - அவர்களுக்குத் தலைமை அவசியம்.

சுருங்கச் சொன்னால் தலைமை என்று ஒன்று இல்லாத நேரம், இல்லாத சூழல், இல்லாத நிலைமை - முஸ்லிம் சமுகத்திற்கு இருக்கவே முடியாது. இதனை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
அவர்களின் வாழ்க்கை மூலமாக நாம் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்.
Read more...
 
1. பின்னடைவால் பிரச்னையா? PDF Print E-mail
Thursday, 19 February 2009 10:38

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதனால் - வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள்.

சம்பளம் வருகிறதே என்று கடன் வாங்கி சொத்துக்களைச் சேர்த்தவர்கள், கடனை அடைக்க முடியாமல் திணருகிறார்கள். தவணை முறையில் சொத்துக்கள் வாங்கியவர்களுக்கும் இதே நிலை தான்.

வேலை இழந்தவர்கள், வேறு வேலை தேடி அது கிடைக்காமல் போகும் போது அவர்களிடம் தற்கொலை சிந்தனை தலை தூக்குகிறது.

பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிப்பவர்களுக்கு - இதோ இஸ்லாமிய ஆலோசனைகள்!

மனித வாழ்வில் சோதனைகள் தவிர்க்க முடியாதவை. பொருளாதாரப் பின்னடைவும் ஒரு சோதனையே.

"சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், பொருட்கள், உயிர்கள், விளைச்சல்கள், ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும், நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். என்றாலும் பொறுமையை மேற்கொள்கின்றவர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக! (திருக் குர்ஆன் 2: 155).

Read more...
 
1. குடும்பச் சண்டைகள் குறைந்திட! PDF Print E-mail
Sunday, 01 February 2009 09:17

ஸஹீஹுல் புகாரி எனும் நபி மொழி நூலிலிருந்து ஒரே ஒரு ஹதீஸை எடுத்து ஆய்வோம் - இங்கே: 

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது; அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றெhரு குழுவில் உம்மு சலமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால், அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதை தள்ளிப் போட்டு, என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்.

ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலமா குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசினர். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசி, எவர் எனக்கு ஓர் அன்பளிப்பைத் தர விரும்புகிறாரோ அவர், நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அந்த அன்பளிப்பை அனுப்பி வைக்கட்டும் என்று கூறும்படி (அல்லாஹ்வின் தூதரை) கேட்டுக் கொள் என்று உம்மு சலமா அவர்களிடம் அவர்களின் குழுவினர் கூறினர்.

Read more...
 
1. என்று மாறும் - இந்த நிலைமை? PDF Print E-mail
Saturday, 31 January 2009 03:46

ஒரு மாணவன். அவனது தந்தை நல்ல வசதி படைத்தவர். அவனை எப்படியாவது நன்றாக படிக்க வைத்து விட வேண்டும் என்பதில் அவருக்கு அளவு கடந்த ஆர்வம். நல்லதொரு கல்லூரியில் சேர்த்து விடுகிறார் மகனை. அவனுக்கு என்னடாவென்றால் படிப்பு ஏறவில்லை. முதலாம் ஆண்டில் பல பாடங்களில் தோல்வி. தந்தையிடம் மறைத்து விட்டான். தந்தையோ மகனிடம் மிக அதிக நம்பிக்கை வைத்திருந்தார். பையன் - பாடங்களை சிரமப்பட்டுப் படித்து தேர்வுகளை மீண்டும் எழுதினான். மீண்டும் தோல்வி. என்ன செய்தான் தெரியுமா? தற்கொலை. "எப்படியும் போங்கடா!" என்று விட்டு விட்டார் மற்ற மகன்களின் கல்வி விஷயத்தில்!

ஆனால் இங்கே ஒரு மாணவன். ஆயிரத்து இருநூறுக்கு தொள்ளாயிரத்துக்கு மேல் எடுத்திருந்தான். கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள் இந்த மதிப்பெண் எடுப்பது கூட பாராட்டுதலுக்கு உரியதே! ஜவுளிக் கடையில் வேலை கேட்டு வந்திருந்தான். மாதம் எழுநூற்று ஐம்பது சம்பளத்துக்கு. ஏன் அவன் படிப்பை தொடரவில்லை? தந்தைக்கு உடல் நலம் இல்லை. பாட்டி படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

எனது நண்பர். அவர் ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர். அவர் சொன்னார். ஒரு இறுதி ஆண்டு மாணவன். இருபத்தி மூன்று தேர்வுகளில் தோல்வி.
Arrears! ஏன் என்று கேட்டாராம். பையன் சொன்னான்: "சார், எனக்கு இந்தப் படிப்பில் எல்லாம் விருப்பம் இல்லை. என் அப்பா வற்புறுத்தி சேர்த்து விட்டார். எனக்கு விருப்பம் எல்லாம் - Fine Arts - ல் தான்.

அப்பாவும் டாக்டர். அம்மாவும் டாக்டர். விடுவார்களா ஒரே பையனை. டாக்டராக்கியே தீர்வேன் என்று நின்றார்கள். ஆனால் பையனுக்குப் பிடிக்கவில்லையே! சேர்த்தார்கள். என்ன நடந்திருக்கும் என்று ஊகியுங்களேன்.

Read more...
 
4. இழப்பு நமக்குத் தான்! PDF Print E-mail
Thursday, 29 January 2009 15:34

ஒரே நாளில் வந்த பத்திரிகை தகவல்கள் இரண்டு:

தேதி: 19 - 12 - 2008

செய்தி 1 . மனித தவறால் ஏற்பட்ட பஞ்சம்

எலும்பை போர்த்திய தோல், வற்றிய முகத்தோடு குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள், உணவுக்காக மைல் கணக்கில் நீண்டு நிற்கும் மக்கள் .... இவையெல்லாம் சோமாலியாவில் காணப் படும் காட்சிகள்.

சோமாலியா ஒரு ஆப்பிரிக்க நாடு. இந்த நாட்டின் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் நிராதரவானவர்கள். அல்லது வறுமையின் கோரப் பிடியில் இருப்பவர்கள். ...

மருத்துவ வசதியோ மிக மிக மோசம். நோய் வந்தால் மரணம் தான் ஒரே வழி. டாக்டர்களும் பற்றாக்குறை. மருந்துகளும் பற்றாக்குறை. இதனால் இறப்பை சந்திப்பவர்கள் நிறைய பேர்.

சோமாலியாவில் ஏற்பட்ட இந்த பெரும் பஞ்சத்தை மனித அவலத்தின் உச்சம் என்று வர்ணிகிறார்கள். இங்கு சராசரியாக ஒரு நாளைக்கு 200 இறப்பதாக கணக்கெடுத்துள்ளார்கள். சுமார் 45 லட்சம் பெர் பசியின் கொடுமையால் தினம் தினம் செத்துப் பிழைக்கிறார்கள்.

Read more...
 
2. தலைமைக்குத் தேவை - தொலை நோக்குப் பார்வை! PDF Print E-mail
Sunday, 25 January 2009 09:55
Vision என்பது ஒரு அருமையான ஆங்கிலச் சொல். இதனை தொலை நோக்குப் பார்வை என்று தமிழில் நாம் மொழிபெயர்க்கலாம். இந்தச் சொல் குறித்து ஆங்கில அகராதி கூறுவதென்ன? : "The ability to think about or plan the future with great imagination and intelligence" (SYN: foresight)தொலை நோக்குப் பார்வை என்பது அபரிமிதமான கற்பனைத் திறனுடனும், அறிவாற்றலுடனும் - எதிர்காலம் குறித்து சிந்திக்கவும் திட்டமிடவும் வல்ல திறமைக்குப் பெயராகும். இதனை அகப் பார்வை என்றும் அழைக்கலாம்.

இந்தத் தொலை நோக்குப் பார்வை - சமுகத் தலைவர்கள், நிர்வாகத் தலைவர்கள், மேலாளர்கள், குடும்பத் தலைவர்கள் - இப்படி எல்லா மட்டங்களிலுமுள்ள தலைவர்களுக்கும் மிக அவசியம் ஆகும்.

இறைத் தூதர்கள் இப்படிப்பட்ட அகப் பார்வை உடையவர்களாகத் திகழ்ந்தார்கள் என்று அல்லாஹுதஆலா தனது திருமறையிலே குறிப்பிட்டுக் காட்டுகின்றான்.

Read more...
 
நமது வெட்க உணர்ச்சியைப் புதுப்பித்துக் கொள்வோமா? PDF Print E-mail
Saturday, 24 January 2009 15:42

ஒவ்வொரு மார்க்கத்துக்கும் ஒரு நற்பண்பு உண்டு. இஸ்லாத்தின் நற்பண்பு - வெட்க உணர்ச்சி ஆகும் என்றார்கள் நபியவர்கள். (நபி மொழி ஆதார நூல்: மாலிக் )

இஸ்லாத்தின் துவக்க காலத்தில் நடந்த சம்பவம் இது: ஒரு பெண் தனது மகன் போரில் இறந்து விட்டார் என்று கேள்விப் படுகிறார். அவர் அந்தச் செய்தி உண்மை தானா என்று அறிய போர்க்களம் நோக்கி ஓடுகிறார். ஆனல் அதற்கு முன் அப்பொழுது தான் அறிவிக்கப் பட்டிருக்கும் "ஹிஜாப்" முறைப்படி தனது உடல் முழுவதும் மறைக்கப் பட்டிருக்கிறதா என்று சில மணித் துளிகள் எடுத்து அவர் உறுதி செய்து கொள்கிறார்.

பின்னாளில் அந்தப் பெண்மணியிடம் அந்தத் துக்ககரமான சமயத்திலும் எப்படி உங்களால் "ஹிஜாப்" விஷயத்தில் கவனம் செலுத்த முடிந்தது என்று வினவப் பட்டது. அதற்கு அந்தப் பெண்மணி இப்படிப் பதிலளித்தார்.

"நான் என் மகனைத் தான் இழந்தேன். ஆனால் நான் என் "ஹயா"வை (வெட்க உணர்வை) இழக்கவில்லையே..."

Read more...
 
2. உணர்ச்சித் திறன் PDF Print E-mail
Saturday, 17 January 2009 14:41

ஒரு முது கலைப் பொறியியல் பட்டதாரி. மிக அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர். தமது படிப்பில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர். ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் வேலைக்குச் சேர்கிறார் அவர். வகுப்பறைக்குள் செல்கிறார். அவருக்கு முதலாவது வகுப்பு அது. மிக நன்றாக பாடத்தைத் தயார் செய்து வந்திருக்கிறார். பாடம் நடத்தத் துவங்குகிறார். மாணவர்கள் அவரை சீண்டிப் பார்க்கின்றனர். கரும் பலகையில் எழுதிடத் திரும்பும் போதெல்லாம், ஓ...ஹொ! - என்று சத்தம். மாணவர்களைப் பார்த்து நீங்கள் எல்லாம் மாணவர்கள் தானா? அல்லது ரவுடிகளா? என்று சத்தம் போடுகிறார். மயான அமைதி வகுப்பில். மறுபடியும் கரும் பலகையின் பக்கம் அவர் திரும்ப மீண்டும் ஓ...ஹொ! மீண்டும் அவர் திட்ட மீண்டும் அமைதி. பாடத்தைத் தொடர முடியவில்லை!

அவருடைய இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன செய்வீர்கள்?

அவர் வேலையை ராஜினாமா செய்து விட்டுப் போய் விட்டார்!  இது ஏன்? சிந்தியுங்கள்!

ஒரு மிக மிகத் திறமை வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர். ஆயிரக் கணக்கான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தவர். சிக்கலான பல கேஸ்களை இலாகவமாகக் கையாள்பவர். ஆனால் - அவருடைய மனைவி அவருடன் வாழ இயலாது என்று தனியே போய் விட்டார். பாவம். ஹோட்டலில் தான் அவருக்கு தினமும் சாப்பாடு! இது ஏன்? சிந்தியுங்கள்!

Read more...
 
1. அவர்கள் என்னை மாற்றி விட முடியாது! PDF Print E-mail
Tuesday, 13 January 2009 02:45

     தலைமைத்துவம் (Leadership) என்பதை சுருக்கமாக விளக்கி விட விரும்பினால் அதனை "பொறுப்பு" (Responsibility) என்ற ஒரே சொல்லில் வைத்து விளக்கி விடலாம்!  .

      ஆமாம், தலைமைத்துவத்தையும் பொறுப்பினையும் நாம் பிரிக்கவே முடியாது! 

      நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. அவர் தம் குடி மக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். குடும்பத்தலைவன் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப் படுவான். மனைவி தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி ஆவாள். அவள் அந்தப் பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவாள். பணியாள் - தன் எஜமானனின் செல்வத்திற்குப் பொறுப்பாளி ஆவான். அவன் தனக்குரிய பொறுப்பு குறித்து விசாரிக்கப் படுவான். அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.(நபி மொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)   

     அபூ பக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது. ஆனால் அந்த மகிழ்ச்சியில் இரு சிறுமிகள் மட்டும் பங்கு பெறவில்லை. காரணம், அபூ பக்ர் அவர்கள், தம் வீட்டின் அருகே வாழ்ந்த அந்த சிறுமிகளுக்கு, அவர்களது ஆடுகளிலிருந்து பால் கறந்து கொடுப்பது வழக்கம். அபூ பக்ர் அவர்கள் கலீஃபாவாக தேர்ந்து எடுக்கப் பட்ட போது, அந்த சிறுமிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதாவது அபூ பக்ர் அவர்கள் வழக்கம் போல தங்களுக்குப் பால் கறந்து தருவார்களா -  என்பது தான் அந்த சந்தேகம்.

Read more...
 
Honesty in Dealings PDF Print E-mail
Sunday, 11 January 2009 09:53

Please read the following stories:  

Story 1:

         Long ago it happened so there lived an honest slave of Allah. He employed few labourers and he paid their wages with the exception of one man who did not take his wages and went away. He invested the wages of that particular labourer and he got much property thereby. Then after sometime, he came and said to that person: “O Allah’s slave! Pay me my wages.” He said to him: “All the camels, cows, sheep and slaves, you see, are yours.” He said: “O Allah’s slave! Don’t mock at me.” He said: “I am not mocking at you. So, he took all the herds and drove them away and left nothing.
Read more...
 
26. இவன் தான் முஸ்லிம் - பாகம் - 2 PDF Print E-mail
Wednesday, 07 January 2009 12:11

வானமும் அழவில்லை! பூமியும் அழவில்லை!

திருகு மறைக் கதையை இப்போது எடுத்துக் கொள்வோம். தொழிற்சாலையின் ஏதோ ஒரு மூலையில் வேலை பார்த்து வந்த நமது கதாநாயகன் அந்தத் தொழிற்சாலையின் மிகச் சிறியதொரு இயக்கத்தில் தான் குறை வைக்கிறான். ஆனால் என்ன நிகழ்கிறது? அது ஒட்டு மொத்தத் தொழிற்சாலையின் செயல் பாட்டையும் பாதித்து விடுகின்றது.

இதே கதை தானைய்யா மனிதனின் விவகாரத்திலும்!

அதாவது மனிதன் தனக்கென ஒரு பாதையைத் தானே வகுத்துக் கொண்டு, இறை வழிகாட்டுதலைப் புறக்கணித்து வாழத் தலைப்பட்டான் எனில் ஒட்டு மொத்தப் பேரண்டத்தின் சீரான இயக்கத்தோடு அவன் மோதிடத் தலைப் படுகின்றான் என்றே பொருள்.

அதாவது மனிதத் தவறுகளின் விளைவுகள் மனிதனை மட்டும் பாதிப்படையச் செய்வதில்லை. மாறாக அவை பேரண்டத்தின் ஏனைய படைப்புகளின் செயல்பாடுகளையும் சீர் குலைக்கச் செய்து விடுகின்றன. இதனை ஒத்துக் கொள்ள நமக்கு என்ன தயக்கம்?

Read more...
 
25. இவன் தான் முஸ்லிம் - பாகம் - 1 PDF Print E-mail
Wednesday, 07 January 2009 11:58

 

மன்னிப்பிற்கும் மழைக்கும் என்ன சம்பந்தம்?

ஓர் ஆங்கிலத் திரைப்படம். படத்தின் பெயர் நவீன யுகம் (
Modern Times). கதாநாயகன் சார்லி சாப்லின். அப்படத்தில் வரும் ஒரு காட்சி.

குடும்பத்தைப் பிரிந்து வேலைக்குச் செல்கிறான் கதாநாயகன். அது ஒரு மிகப் பெரிய தொழிற்சாலை. எனினும் நமது கதாநாயகனின் வேலை மிக எளிதானது தான். ஒரு மிகப்பெரிய கூடம். அதனுள் ஒரு சிறிய அறை. சுழலுகின்ற உலோகப் பட்டை ஒன்று அந்த அறையின் ஒரு பக்கமாக உள்ளே நுழைந்து மறு பக்கம் வழியாக அடுத்த அறைக்குச் சென்று கொண்டிருக்கும்.

அந்த உலோகப் பட்டை மீது திருகு மறைகள் (
Nuts) வரிசையாக வைக்கப்பட்டு அவை அறைக்குள்ளே வரும். நமது கதாநாயகன் செய்ய வேண்டியது எல்லாம் முதலில் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட வேண்டும். மூன்றாவது திருகு மறையை எடுத்து ஒரே ஒரு தடவை மட்டும் திருகி அப்படியே அந்த உலோகப் பட்டையின் மீது வைத்து விட வேண்டும். அது போலவே மீண்டும் வருகின்ற இரண்டு திருகு மறைகளை விட்டு விட்டு, மூன்றாவதை எடுத்து ஒரே ஒரு தடவை திருகி வைத்து விட வேண்டும். அவ்வளவு தான் வேலை. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் வேலை. மணியடித்தால் அன்றைய வேலை முடிந்தது.
Read more...
 
3. தண்ணீருக்குத் தங்கமா? PDF Print E-mail
Tuesday, 30 December 2008 08:14

கலீஃபா அல் ஹாரூன் அல் ரஷீத் காலத்தில் நடந்த கதை ஒன்று!

பெரியவர் ஒருவர் - சிறிய கிராமம் ஒன்றிலிருந்து - கலீஃபா அவர்களை சந்திக்க - வந்திருந்தாராம். அவருக்கு - கலீஃபாவிடம் கொடுப்பதற்கென்று பெரிதாக ஏதும் கொண்டு வர இயலாததால், அந்த கிராமத்திலிருந்த ஒரு கிணற்றிலிருந்து - மிகவும் சுவையான நீரை ஒரு பானையில் கொண்டு வந்திருந்தாராம்.

அவர் பாக்தாத் வந்து சேர்வதற்குள், நாட்பட்ட அந்தத் தண்ணீர் சிறிது துர்நாற்றம் அடிக்கத் துவங்கி விட்டது. ஆனால், அந்த நீரை அவர் கலீஃபாவிடம் அன்பளிப்பாக அளித்த போது, கலீஃபா அவர்கள் அந்தப் பானை நிறைய தங்கக காசுகளை நிரப்பி அவரிடம் வழங்குமாறு உத்தரவிட்டாராம்.

இந்தப் பேருபகாரத்தைக் குறித்து அவரது சகாக்கள் - கலீஃபாவிடம் வினவிய போது அவர் சொன்னாராம்:

"நான் ஒன்றும் பெரிதாகப் பேருபகாரம் செய்து விடவில்லையே! அவரிடம் இருந்ததை அவர் கொண்டு வந்தார். என்னிடம் இருந்ததை நான் கொடுத்தேன். அவ்வளவு தான்!"

Read more...
 
2. ஈட்டியுடன் வருகிற ஒருவரை மாற்றிக் காட்டும் சாகசம்! PDF Print E-mail
Tuesday, 30 December 2008 08:07
நபி صلى الله عليه وسلم அவர்கள் - மதினாவில் அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புவதற்கும், மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் தனது முதல் இஸ்லாமிய அழைப்பாளராக மதினாவுக்கு அனுப்பியது - முஸ் அப் பின் உமைர் رَضِيَ اللَّهُ عَنْهُ - என்ற மிகச் சிறந்த நபித் தோழரைத் தான்!

இவர் 'அல் முக்ரி' - குர் ஆனின் ஞானமுடையவர் - என்று முஸ்லிம்களால் கண்ணியமாக அழைக்கப் பட்டார்.

அவருடைய கருத்துப் பரிமாற்றத் திறனைக் கொஞ்சம் கவனியுங்கள்.

முஸ் அப் அவர்களும் அஸ்அத் இப்னு ஜுராரா
رَضِيَ اللَّهُ عَنْهُ என்ற இன்னொரு மதினத்து அன்சாரித் தோழரும் சேர்ந்து அங்கே அழைப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு நாள் அஸ்அத் அவர்களும் - முஸ் அப் அவர்களும் அழைப்புப் பணி நிமித்தமாக - ஒரு கோத்திரத்தாரின் தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

இது - மதினத்து கோத்திரங்களைச் சேர்ந்த ஸஅது இப்னு முஆத் மற்றும் உஸைத் இப்னு ஹுளைர் - ஆகிய இரு தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை.

முஸ்அபும் அஸ்அதும் தங்களின் தோட்டத்தில் அமர்ந்திருக்கின்றனர் என்று கேள்விப் பட்டவுடன் ஸஅத் உஸைதிடம் "நீ நமது எளீயோர்களை ஏமாற்றும் இந்த இருவரிடமும் சென்று அவர்களை எச்சரிக்கை செய்! நமது வீடுகளுக்கு அவர்கள் வரக்கூடாது என்று தடுத்து விடு! நான் அவர்களிடம் கூற முடியாததற்குக் காரணம் அஸ் அத் இப்னு ஜுராரா எனது சிறிய தாயின் மகன் ஆவார். இல்லாவிட்டால் நானே இதனைச் செய்திருப்பேன்" என்று கூறினார்.

Read more...
 
1. சொல்லில் உறுதி வேண்டும் PDF Print E-mail
Monday, 29 December 2008 15:49
அலி காட்டமாலா (Ali Guatemala). இவர் ஒரு முன்னாள் கிருத்துவப் பாதிரியார். அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் இஸ்லாத்தைத் தழுவிய பின், 2007 - ம் ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்றிருந்த போது - இஸ்லாத்தைத் தழுவிய சூழல் குறித்து அளித்த பேட்டி ஒன்றில் இவ்வாறு சொல்கிறார்: "அமெரிக்காவில் க்வீன் சிட்டி (Queen City) என்ற நகரத்தில் பாதிரியாராக (Priest) நான் பணியாற்றினேன். எனது பிரச்சாரத் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்காக - திருக் குர் ஆனையும் சேர்த்து பிற மத நூல்களை நான் படிக்கத் துவங்கினேன். ஆனால் அதுவே என் வாழ்க்கையின் திருப்பு முனையாகி விட்டது.

அவர் சொல்கிறார்:

"When I read the first verse of Chapter Al-Baqara: ‘This Book, there is no doubt in it, is a guidance to the pious,’ it struck my mind. I pondered about this verse, which gave me the impression that the author was speaking clearly and definitely without having any doubt."

Read more...
 
Covering Shortcomings PDF Print E-mail
Sunday, 28 December 2008 11:56

The Prophet (SAW) gave a speech that even reached the ears of virgins in their private rooms. He said. " O you have spoken the words of faith, but faith has not penetrated your hearts! Do not hurt the feelings of the believers and do not seek out their faults. Whoever seeks out the faults of his Muslim brother, Allah (SWT) will seek out his faults, and whoever’s faults are sought out by Allah (SWT) will be exposed, even if he is in the innermost part of his house." (Tabarani)

Narrated Abdullah ibn Mas'ud: The Prophet (peace be upon him) said: None of my Companions must tell me anything about anyone, for I like to come out to you with no ill-feelings.(Abu Dawood - 2274)

No one conceals the sin of another in this world, but Allah will cover him on the Day of Resurrection." (Muslim)

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 Next > End >>

Page 1 of 5